நாஞ்சில் நாட்டு மோர் களி / NANJIL NATTU BUTTER MILK RECIPE

Posted in மோர் தயிர் ரெசிபி

 

தேவையான பொருட்கள்

அரிசிமாவு                   :      1 கப்

புளித்த மோர்               :      2 கப்

பச்சை மிளகாய்          :      6 (பொடியாக நறுக்கியது)

 இஞ்சி                             :      சிறிய துண்டு (பொடியாக நறுக்கியது)

 கறிவேப்பிலை            :     சிறிதளவு

 மல்லித்தளை              :      சிறிதளவு

 கடுகு                           :      1 ஸ்பூன்

உளுத்தம் பருப்பு        :      2 ஸ்பூன்

கடலைப் பருப்பு         :      2 ஸ்பூன்

பெருங்காயத்தூள்              :      2 சிட்டிகை

உப்பு                              :      தேவையான அளவு

எண்ணை                    :      4 டேபிள் ஸ்பூன்

செய்முறை

1. அரிசிமாவுடன் உப்புபுளித்த தயிர் சேர்த்து தோசை மாவு 

பதத்தில் கரைக்கவும்.

2. அடுப்பில் வாணலி வைத்து எண்ணை ஊற்றவும். எண்ணை 

காய்ந்தவுடன் கடுகைப் போடவும்.

3. கடுகு வெடித்தபின் உளுத்தம் பருப்புகடலைப் பருப்பையும் 

போடவும்.

4. பருப்புகள் சிவந்தபின் பச்சை மிளகாய்இஞ்சி

கருவேப்பிலைகொத்துமல்லி சேர்த்து வதக்கவும்.

5. வதங்கிய பின்பெருங்காயம் சேர்க்கவும்.

6. பின்பு கரைத்த மாவை சேர்த்து கட்டியில்லாமல் கிளறவும். 

கேஸ் அடுப்பை ஸ்லிம்-ல் வைத்துக் கொள்ளவும்.

7. மாவு வெந்து கெட்டியான பின் அடுப்பை அணைக்கவும். 

சூடான மோர் களி மாலை டிபனுக்கு ரெடி! 

Butter Milk Health Benefits And Nutrititon Facts

.