துவரம்பருப்பு முளைக்கீரை பொரியல் / Pigeon Pea Amaranth Spinach Fry

Posted in கீரை வகை ரெசிபிகள்

தேவையான பொருட்கள்

முளைக்கீரை                -     ஒரு கட்டு

துவரம்பருப்பு                -  1/2 கப்

தேங்காய் துருவல்             -     2டேபிள்ஸ்பூன

வத்தல் மிளகாய்              -     1

சின்ன வெங்காயம்            -     ஐந்தாறு

வெஷீமீளை சுண்ணாம்பு   -     ஒரு துளி

உப்பு                           -     தேவையான அளவு.

தாளிக்க: 

கடுகு                          -     அரை டீஸ்பூன், 

உளுத்தம் பருப்பு              -      2 டீஸ்பூன்

கறிவேப்பிலை               -     சிறிதளவு

எண்ணெய்                    -     3 டேபிள்ஸ்பூன்.

செய்முறை:

*கீரையை ஆள்ந்து, பொடியாக நறுக்கிக் கழுவி வைத்துக் கொள்ளவும்.

 

*முதலில்  துவரம்பருப்பை வேகவைத்துகெள்ளவேணடும்

 

 *எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, வரமிளகாய் கிள்ளிப்போட்டு, கறிவேப்பிலை சேர்க்கவும். சின்ன வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிப் போட்டு வதக்கவும்.

 *திட்டமாகத் தண்ணீர் விட்டு, அது கொதித்ததும் கொஞ்சமாகச் சுண்ணாம்பு போட்டு அது கரைந்ததும் கீரையைப் போடவும்.

கீரைவெந்ததும் துவரம்பருப்பு உப்பு, தேங்காய் துருவல் சேர்த்து கிளறி சிறிது நேரம் சிம்மில் வைத்து பின் இறக்கவும்

குறிப்பு: அரைக்கீரை, பொன்னாங்கண்ணிக் கீரையிலும் இதே போல பொரியல் செய்யலாம்.

சுண்ணாம்பு சேர்ப்பதால் கீரை நிறம் மாறாமல் பச்சையாகவே இருக்கும்.

இக்கீரையில் மட்டுமே எல்லா விதமான தாது உப்புக்களும் உள்ளதால் இதை நாள்தோறும் உணவுடன் சேர்த்துக்கொண்டால் ஒரு பரிபூரண உணவுக்குரிய எல்லாச் சத்துக்களையும் நாம் பெற முடியும்.

 

 

.