• Screenshot_3.png - 979.39 KB
  • IMG_8984-Copy1.jpg - 232.79 KB
  • food.JPG - 276.29 KB

அகத்திக் கீரை பொரியல் / SESBANIA GRANDIFLORA FRY

Posted in கீரை வகை ரெசிபிகள்

தேவையான பொருட்கள்

அகத்திக் கீரை           –        4 கப்

தேங்காய் எண்ணெய்   –        1 மேஜைக்கரண்டி

கடுகு,                    –        1 தேக்கரண்டி

உளுத்தம் பருப்பு        –        1 தேக்கரண்டி

வெங்காயம்              –        1

பூண்டு                    –        6 பற்கள்

காய்ந்த மிளகாய்         -       2-3

உப்பு                      –        தேவையான அளவு

தேங்காய்                   –        ½கப் (துருவியது)

செய்முறை

அகத்திக் கீரையை எடுத்துக் கொள்ளவும்


அதிலுள்ள இலைகளை தனியே எடுத்து நீரில் நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்

தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்

பூண்டு மற்றும் வத்தல் மிளகாயை மிக்சியில் போட்டு கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்

பின்பு எண்ணெய் சூடாக்கி கடுகு மற்றும் உழுத்தம் பருப்பை தாளிக்கவும்

நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும்

சிறிது நேரம் வதக்கவும்

பின்பு அரைத்த பூண்டு மற்றும் வத்தல் மிளகாயை சேர்க்கவும்

சிறிது நேரம் வதக்கவும்

பின்பு சுத்தம் செய்த கீரையை சேர்த்துக் கொள்ளவும்

நன்கு கிளறவும்

கீரை வெந்து விட்டது

தேவையான அளவு உப்பு சேர்க்கவும்

நன்கு கிளறவும்

பின்பு தேங்காய் துருவல் சேர்க்கவும்

நன்கு கிளறவும்

 

அகத்திக் கீரை பொரியல் ரெடி 

.