வெங்காய அவல் உப்புமா / ONION BEATEN RICE UPMA

Posted in தானிய வகை ரெசிபிகள்

தேவையான பொருட்கள்

அவல்                –        1.5 கப்

வெங்காயம்           –        1

மஞ்சள் தூள்          –        1/4 தேக்கரண்டி

கடுகு                 –        1 தேக்கரண்டி

நிலக்கடலை          –        2.5 மேஜைக்கரண்டி

கறி வேப்பிலை        –        12

பச்சை மிளகாய்       –        1

சர்க்கரை              –        1 தேக்கரண்டி

எண்ணெய்            –        1.5 மேஜைக்கரண்டி

செய்முறை

அவலை நீரில் கழுவிக் கொள்ளவும்.

பின்பு அவலை கைகளால் அழுத்தி நீரை வெளியேற்றவும்.

அதனுடன் சர்க்கரை , உப்பு, மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளறவும்.

ஒரு பானில் நிலக்கடலையை போட்டு வறுத்துக் கொள்ளவும்.

பானில் எண்ணெய் விட்டு சூடாக்கவும்.

எண்ணெயில் கடுகை தாளிக்கவும்.

அதனுடன் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

கறி வேப்பிலை மற்றும் பச்சை மிளகாய் சேர்க்கவும்.

1/2 நிமிடம் வதக்கவும்.

வறுத்த நிலக்கடலை சேர்த்து நன்கு கிளறவும்.

பின்பு அவலை சேர்த்து நன்கு கிளறவும்

பின்பு அதனை மூடி வைத்து 2-3 நிமிடங்கள் குறைந்த தீயில் வேக வைக்கவும்.

1.5 நிமிடங்கள் கழித்து மூடியை திறந்து சிறிது கிளறி மீண்டும் மூடி வைத்து வேக வைக்கவும்.

பின்பு தீயை அணைத்து விட்டு அதனை மூடி 2 நிமிடங்கள் வைக்கவும்.

பின்பு மூடியை எடுத்து விட்டு எலுமிச்சை சாறு, மல்லித் தளை மற்றும் துருவிய தேங்காய் சேர்த்து நன்கு கிளறவும்.

வெங்காய அவல் ரெடி!!!!!!!!!!

ONION HEALTH BENEFITS AND MINERALS

.