பொட்டுக்கடலை மாவு தோப்பம் / CHANNA DAL RECIPE

Posted in தானிய வகை ரெசிபிகள்

தேவையான பொருள்கள்:

எண்ணெய்                -      பொரிப்பதற்குத் தேவையான அளவு

தேங்காய்                 -      ஒன்று

பொட்டுக்கடலை மாவு     -      ஒரு கைப்பிடி

வெல்லம்                 -      ஒரு கப்

ஏலக்காய் தூள்            -      ஒரு தேக்கரண்டி

மேல்மாவிற்கு:   

மைதா மாவு              -      ஒன்றரை கப்

இட்லி மாவு              -      கால் கப்

பேக்கிங் பவுடர்           -      அரைத் தேக்கரண்டி

உப்பு                     -      அரைத் தேக்கரண்டி

செய்முறை:

  • தேங்காயைப் பூந்துருவலாகத் துருவிக் கொள்ளவும். ஒரு வாணலியைச் சூடாக்கி, அதில் இந்த தேங்காய்த் துருவலைப் போட்டு, குறைவானத் தீயில் அதில் உள்ள நீரெல்லாம் சுண்டும் வரை வதக்கவும்.
  • பிறகு அதை ஒரு தட்டில் கொட்டி, அது சூடாக இருக்கும் போதே பொட்டுக்கடலை மாவு, ஏலப்பொடி, பொடித்த வெல்லம் ஆகியவற்றைச் சேர்த்து கையால் பிசையவும்.
  • நன்கு பிசைந்து அதனை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.
  • மேல் மாவிற்கு தேவையான அனைத்தையும் சிறிது நீர் ஊற்றி இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். சூடாகியதும் ஒவ்வொரு உருண்டையாக எடுத்து மேல் மாவில் தோய்த்து எண்ணெய்யில் போடவும்.
  • உருண்டை வெந்து இளம் பழுப்பு நிறமானதும் எடுத்து விடவும்.
.