மசால் வாழைக்காய் புளி ப்ஃரை / Masala Plantain Tamarind Fry

Posted in வாழைக்காய் ரெசிபி

தேவையான பொருட்கள்

வாழைக்காய்                  –       2

காய்ந்த மிளகாய்             –       2

தனியா                                        -       2 டீஸ்பூன்

நல்ல மிளகு                 -       1 டீஸ்பூன்

வெந்தயம்                              -       1/2 டீஸ்பூன்

மஞ்சள்தூள்                  -       1/4 டீஸ்பூன்

புளி                                                             நெல்லிக்காயளவு

தேங்காய் எண்ணெய்     -       2 முதல் 3 டேபிள்ஸ்பூன் வரை

கடுகு,                            -       1/2 டீஸ்பூன்

காயத் தூள்                        -       1/2 டீஸ்பூன்

கறிவேப்பிலை                                   சிறிது

உப்பு                                             -        தேவைக்கேற்ப 

செய்முறை:

*வாழைக்காயின் தோலை சீவி விட்டு, நடுத்தர அளவு துண்டுகளாக வெட்டி, தண்ணீரில் போட்டு வைக்கவும்.

*வெறும் வாணலியில், மிளகாய், தனியா, மிளகு, வெந்தயம் ஆகியவற்றைப் போட்டு சற்று சிவக்க வறுத்தெடுத்துப் பொடித்துக் கொள்ளவும்.

புளியை 1/4 கப் தண்ணீரில் ஊற வைத்து, கரைத்துப் பிழிந்து, புளித்தண்ணீரை எடுத்து வைத்துக் கொள்ளவும். 

*ஒரு வாணலியில் எண்ணை விட்டு அதில் கடுகு போட்டு வெடிக்க விடவும். கடுகு வெடித்ததும், பெருங்காயம், கறிவேப்பிலை சேர்க்கவும். 

*பின்னர் அத்துடன் வாழைக்காய் துண்டுகல்ளைப் போட்டு அத்துடன் மஞ்சள் தூள, உப்பு சேர்த்து சற்று நேரம் வதக்கவும். 

*பின்னர் அதில் புளித்தண்ணீரை ஊற்றிக் கிளறி விடவும். அத்துடன் மேலும் அதில் 1/2 கப் தண்ணீரைச் சேர்த்து, மூடி வேக விடவும். 

*காய் வெந்து, தண்ணீர் சுண்டியவுடன், பொடித்து வைத்துள்ள மிளகாய் பொடியைத் தூவிக் கிளறி விடவும். 

*கடாயில் மசாலாத்தூள் நன்றாகச் சேர்ந்து வதங்கியவுடன், இறக்கி வைக்கவும்.

* சுவையான மசால் வாழைக்காய்  புளி ப்ஃரை ரெடி.!!!

 

*உடல்நலத்திற்கு:  வாயால் ரத்தம் கக்குபவர்களுக்கும், கிராணி, நீரழிவு உள்ளவர்களுக்கு பத்திய உணவாக வாழைக்காய் பயன்படும்.

Raw Banana (Green Plantain) Health Benefits And Minerals

.