• Screenshot_3.png - 979.39 KB
  • IMG_8984-Copy1.jpg - 232.79 KB
  • food.JPG - 276.29 KB

துவரம் பருப்பு ஆட்டு எலும்பு ரசம் / TURDAL & MUTTON BONE RASAM

Posted in ரசம் வகைகள்

sunsamayal.com  தவரம பரபப ஆடட எலமப ரசம

தேவையானபொருள்கள்

ஆட்டு எலும்பு                        -           1/2 கிலோ

கத்தரிக்காய்                            -           150 கிராம்

துவரம் பருப்பு                        –          100 கிராம்

உருளைக்கிழங்கு                    -          150 கிராம்

முருங்கைகாய்                     -           2

தக்காளி                                  -           கால் கிலோ

சின்னவெங்காயம்                -           100 கிராம்

பெரியவெங்காயம்              -           100 கிராம்

பச்சை மிளகாய்                 –          10

காய்ந்த மிளகாய்                    -           10

சீரகம்                                       -           1 டீஸ்பூன்

நல்ல மிளகு                          -           1 டீஸ்பூன்

பட்டை                                    -           4

பிரியாணி-இலை                    –          1

மஞ்சள்தூள்                          –          1 டீஸ்பூன்

சாம்பார் தூள்                           –          2 டீஸ்பூன்

சோம்பு                                     –          1 டீஸ்பூன்

எண்ணெய்                              –          தேவையான அளவு 

செய்முறை

*ஒரு பாத்திரத்தில் ஆட்டு எலும்புதுவரம் பருப்புஇரண்டையும் மஞ்சள் தூள்சிறிது உப்புமற்றும் 5 டம்ளர் தண்ணிர் சேர்த்து வேக வைக்கவும்.

*பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி கடாய் சூடானதும் சீரகம்சோம்புபட்டை,பிரியாணி இலைபச்சைமிளகாய்வரமிளகாய் என அனைத்தையும் ஒவ்வென்றாக சேர்த்து நன்கு வதக்கவும். 

*அதனுடன் இரண்டு வெங்காயம் , தக்காளியையும் சேர்த்து வதக்கவும்.

*அதனுடன்  கத்திரிக்காய்முருங்கைக்காய்உருளைக்கிழங்கு சேர்த்து நன்கு வதக்கி  சாம்பார் தூள் சேர்த்து வதக்கவும்,

*காய் நன்றாக வதங்கியதும் கலவையுடன் வேகவைத்த ஆட்டு எலும்புகளைப் போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து வேகவைக்கவும நன்றாக வெந்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

* இப்போது சுவையான துவரம் பருப்பு ஆட்டு எலும்பு ரசம் ரெடி!!!!

 Mutton Health Benefits And Nutrititon Facts

.