இஞ்சி சட்னி ரெசிபி / GINGER CHUTNEY RECIPE

Posted in சட்னி வகைகள்

 தேவையான பொருட்கள்

இஞ்சி                            -     1 கப்(பொடியாக நறுக்கியது)

பூண்டு                             -      4 பற்கள்

புளி                                 -     சிறிய எலுமிச்சை அளவு

காய்ந்த மிளகாய்                -    3

வெல்லம்/சர்க்கரை            -     2 மேஜைக்கரண்டி

உளுத்தம் பருப்பு              -     1 மேஜைக்கரண்டி

பொரிக்கடலை                -      1 மேஜைக்கரண்டி

கடுகு,                           -     1 தேக்கரண்டி

சீரகம்                           -     1      தேக்கரண்டி

தேங்காய் எண்ணெய்         -     3 மேஜைக்கரண்டி

உப்பு                             -     தேவைக்கு

செய்முறை

தேவையான பொருட்களை எடுத்துக்கொள்ளவும்

கடாயில் எண்ணெய் விட்டு சூடாக்கவும்

அதில் காய்ந்தமிளகாயை போட்டு தாளிக்கவும்

அதனுடன் பொரிக்கடலை, உழுத்தம் பருப்பு மற்றும் பூண்டு சேர்த்து நன்கு கிளறவும்

 

அவை பொன்னிறமாகும் வரை வதக்கவும்

பின்பு அவற்றை எடுத்து தனியே வைக்கவும்

பின்பு அதே கடாயில் இஞ்சியை போட்டு பொரித்தெடுக்கவும் 

பின்பு அதையும் வதக்கி வைத்திருக்கும் கலவையோடு சேர்க்கவும்

அதனுடன் புளி மற்றும் வெல்லம் சேர்க்கவும்

அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்

;பின்பு அதனுடன் தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்

பின்பு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்

சூடானதும் அதில் கடுகு, உழுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்கவும்

பின்பு அதனுடன் எடுத்து அரைத்து வைத்துள்ள சட்னியை சேர்க்கவும்

 

அடுப்பை அணைக்கவும்

பின்பு நன்கு கலக்கவும். சுவையான சட்னி ரெடி

Ginger Health Benefits And Minerals

.