கொண்டைக்கடலை பன்னீர் மசாலா / CHICK PEAS PANEER MASALA

Posted in பன்னீர் ரெசிபி

தேவையான பொருட்கள்

கொண்டைக்கடலை       –        1/2 கப்

நீர்                       -       1 கப்

சோடா                   –        ஒரு சிட்டிகை

மஞ்சள் தூள்             –        1/8 தேக்கரண்டி

பன்னீர்                   –        150 கிராம்

வெங்காயம்               –        3/4 கப்

தக்காளி                  –        11/2 கப்

எண்ணெய்                –        1 மேஜைக்கரண்டி

ஜீரகம்                    –        1/2 தேக்கரண்டி

இஞ்சி பூண்டு விழுது      –        1 தேக்கரண்டி

கரம் மசாலா தூள்         –        1 தேக்கரண்டி

மிளகாய் தூள்             –        3/4 தேக்கரண்டி

பச்சை மிளகாய்           –        1

உப்பு                     –        தேவையான அளவு

வெந்தயக் கீரை           –        ஒரு சிட்டிகை

மல்லித்தளை             –        சிறிது

செய்முறை

கொண்டைக்கடலையை நன்கு கழுவி இரவு முழுவதும் நீரில் ஊற வைக்கவும். பின்பு நீரை வடிகட்டி விட்டு பிரஷர் குக்கரில் கொண்டைக்கடலை மற்றும் அதனுடன் சோடா, நீர் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து 1 விசில் வரும் வரை வேக வைக்கவும்.

அதே நேரம் வெங்காயம் மற்றும் தக்காளியை நறுக்கி அவற்றை தனித்தனியே அரைத்துக் கொள்ளவும்.

பானில் எண்ணெய் விட்டு சூடானதும் ஜீரகத்தை தாளிக்கவும்.

பின்பு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வேக வைக்கவும்.

வெங்காய விழுது சேர்க்கவும்.

பொன்னிறமாகும் வரை நன்கு கிளறவும்.

தக்காளி சேர்த்து 4 நிமிடங்கள் வதக்கவும்.

கரம் மசாலா தூள், மிளகாய் தூள், மல்லித் தூள் மற்றும் உப்பு சேர்க்கவும்.

அனைத்தையும் சேர்த்து ஓரங்களிலிருந்து பிரிந்து வரும் வரை நன்கு கிளறவும்

பின்னர் வேக வைத்த கொண்டைக்கடலை மற்றும் நீர் சேர்க்கவும்.

நன்கு கிளறி வேக வைக்கவும்.

பின்பு அதனை மிதமான தியில் மூடி வைத்து 4 நிமிடங்கள் வேக வைக்கவும்.

கிரேவி கெட்டியானதும் அதனுடன் பன்னீர் மற்றும் வெந்தயக் கீரை சேர்க்கவும்.

நன்கு கிளறவும். பின்பு மல்லித் தளை சேர்த்து மூடி வைத்து தீயை அணைத்து விடவும்.

கொண்டைக்கடலை பன்னீர் மசாலா ரெடி!!!!!!!!

PANEER HEALTH BENEFITS AND MINERALS

.