• Screenshot_3.png - 979.39 KB
  • IMG_8984-Copy1.jpg - 232.79 KB
  • food.JPG - 276.29 KB

ரவா வித் கோதுமை உப்புமா / RAVA WITH WHEAT UPMA

Posted in சர்க்கரை நோயாளிகளுக்கு

sunsamayal.com  wheat sooji upma

தேவையானபொருள்கள்

கோதுமை ரவை          -     ஒரு கப்,

துவரம்பருப்பு             -     கால் கப்,

பெரிய வெங்காயம்         -        1,

பச்சை மிளகாய்              -       3,

மல்லித் தளை            -      சிறிது,

கறிவேப்பிலை            -     சிறிது,

உப்பு                     -     தேவைக்கேற்ப.

தாளிக்க:

கடுகு                    -     அரை டீஸ்பூன்,

உளுத்தம் பருப்பு          -     ஒரு டீஸ்பூன்

தேங்காய் எண்ணெய்      -     3 டீஸ்பூன்.

செய்முறை

துவரம்பருப்பை மலராமல் வேகவைத்து கொள்ளுங்கள். மிளகாயை கீறி வைத்துக்கொள்ளுங்கள்வெங்காயத்தை நறுக்கிக்கொள்ளுங்கள். குக்கரில் எண்ணெயை காயவைத்து கடுகு,உளுத்தம்பருப்பு தாளித்து வெங்காயம்மிளகாய்சிட்டிகை உப்பும் சேருங்கள். இது நன்குவதங்கியதும்அதில் ரவை சேர்த்து சிறு தீயில் வாசனை வரும் வரை வறுத்து இரண்டரை கப்கொதிக்கும் நீரை சேருங்கள். அத்துடன் தேவையான உப்பும் சேர்த்துகுக்கரை மூடிகுறைந்த தீயில் 10 முதல் 15 நிமிடங்கள் வரை வேகவிட்டு இறக்குங்கள். ஆறியதும் திறந்து மல்லித்தழை,கறிவேப்பிலைவெந்த துவரம் பருப்பு சேர்த்து நன்கு கிளறுங்கள்.

*இப்போது சுவையான ரவா வித் கோதுமை உப்புமா ரெடி. இதுமணமாகவும் ருசியாகவும்இருக்கும்.

.