சிக்கன் பிரைய் / CHICKEN FRY

Posted in அசைவம்

வெடக் கோழி              -  1

சோயா சாஸ்                -  1 கப்

வினிகர்                    -  அரை கப்

நல்லெண்ணெய்           -   2 தேக்கரண்டி

அஜினோ மோட்டோ          - அரை தேக்கரண்டி

பல்லாரி வெங்காயம்      -   2

நல்ல மிளகு தூள்          - 1 டீஸ்பூன்

சோள மாவு                 - 3 மேஜைக்கரண்டி

மைதா                       - 2 மேஜைக்கரண்டி

பெரிப்பதற்கு டால்டாஉப்புமஞ்சள்  -  தேவையான அளவு

எப்படி செய்வது? 

கோழியை எலும்புடன் சிறு சிறு உருண்டை துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். பின்னர் அரைத்த வெங்காயம், மிளகுத்தூள், சோயா சாஸ்வினிகர், அஜினோ மோடடோ, உப்பு, மஞ்சள் ஆகியவற்றின் கலவையில் கோழி துண்டுகளை அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர்  குக்கரில் போட்டு அரை வேக்காடு வேக வைக்க வேண்டும். பின்னர் கார்ன் பிளவரையும், மைதா மாவையும் கலந்து அவற்றை தண்ணீர் ஊற்றி கரைக்க வேண்டும். அதில் வேக வைக்கப்பட்ட கோழி துண்டுகளை போட வேண்டும். அதன் பின்னர் கடாயில் டால்டாவை ஊற்றி, நன்றாக சூடானவுடன் அந்த கோழி துண்டுகளை போட்டு சிவப்பு நிறமாக பொறித்து எடுக்க வேண்டும். சுவையான சைனீஸ் சிக்கன் பிரைய் ரெடி. இதை செய்வதற்கு 45 நிமிடங்களாகவும். 

Chicken Health Benefits And Nutrititon Facts

.