நாஞ்சில் நாட்டு மோர் குழம்பு / NANJIL NATTU BUTTERMILK CURRY

Posted in மோர் தயிர் ரெசிபி

தேவையான பொருட்கள்

தயிர்                              -        ஒரு கப்

உப்பு                       -        தேவைக்கேற்ப

மஞ்சள்தூள்               -        கால் தேக்கரண்டி

அரைக்க:

துவரம் பருப்பு             -        கால் தேக்கரண்டி

பச்சரிசி                   -        கால் தேக்கரண்டி

மல்லித் தூள்            -        கால் தேக்கரண்டி

பச்சை மிளகாய்          -        5 (அ) காரத்திற்கேற்ப

தேங்காய் துருவல்        -        3 தேக்கரண்டி

மிளகுசீரகம்             -        கால் தேக்கரண்டி

இஞ்சி                    -        சிறு துண்டு

தாளிக்க:

எண்ணெய்                -      2 தேக்கரண்டி

கடுகு ,உளுத்தம் பருப்பு    -      கால் தேக்கரண்டி

வத்தல் மிளகாய்            -        2

செய்முறை

 துவரம் பருப்புடன் அரிசி மற்றும் கொத்தமல்லியைச் சேர்த்து, தண்ணீர் ஊற்றி அரை மணி நேரம் ஊறவைக்கவும்.

 

 ஊறியதும் அவற்றுடன் மிளகு, சீரகம், பச்சை மிளகாய், தேங்காய் துருவல் மற்றும் இஞ்சி சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

 

 தயிரைக் கட்டிகளில்லாமல் கரைத்து, அதில் அரைத்த விழுது, உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு கரைத்துக் கொள்ளவும்.

  

வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்கவும். அத்துடன் கரைத்து வைத்திருக்கும் மோர் கலவையைச் சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கவும்.

  

சுவையான மோர் குழம்பு தயார்.

 

விருப்பப்பட்டால் வெண்டைக்காய், பூசணிக்காய் சேர்த்தும் செய்யலாம்

Green Chilli Health Benefits and Minerals

Black Beans Health Benefits And Minerals

.