கடலைமாவு தயிர்க்குழம்பு / GRAM FLOUR CURD CURRY

Posted in மோர் தயிர் ரெசிபி

தேவையான பொருட்கள்:

கடலை மாவு              –      2 கப்

 தயிர்                     -      1 1/2 கப்

 இஞ்சி                                  -      1/2 டீஸ்பூன்

பச்சை மிளகாய்    பேஸ்ட் -      1/2 டீஸ்பூன்

சர்க்கரை                  -      2 டீஸ்பூன்

மல்லித்தளை                      -      2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)

தண்ணீர்                   -      2 1/2 கப்

 உப்பு  

தாளிப்பதற்கு:

கறிவேப்பிலை                          –      சிறிது

சீரகம்                          -      1/2 டீஸ்பூன்

கடுகு,                     -      1/2 டீஸ்பூன்

காயத் தூள்                     -      1 சிட்டிகை

காய்ந்த மிளகாய்                        -          1

 நெய்                     -      2 டீஸ்பூன்

 செய்முறை:

 முதலில் ஒரு பௌலில் கடலை மாவு, தயிர் மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு மென்மையாக கலந்து கொள்ள வேண்டும். பின்னர் அதனை ஒரு வாணலியில் ஊற்றி அடுப்பில் வைத்து, நன்கு கொதிக்க விட வேண்டும். அடுத்து இஞ்சி பேஸ்ட், பச்சை மிளகாய் பேஸ்ட், சர்க்கரை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, தீயை குறைத்து வைத்து 8-10 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு, இறக்க வேண்டும். பின்பு ஒரு சிறிய வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், கடுகு, கறிவேப்பிலை, வரமிளகாய், பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து, இறக்கி வைத்துள்ள கலவையில் ஊற்றி கிளறி, கொத்தமல்லியை தூவி அலங்கரித்தால், சூப்பரான கடலைமாவு தயிர்க்குழம்பு  ரெடி!!! 

.