முருங்கைக்கீரை பருப்பு கூட்டு / DRUMSTICK LEAVES DAL KOOTU

Posted in கீரை வகை ரெசிபிகள்

தேவையானப் பொருட்கள்

முருங்கை கீரை                              -          1 கட்டு

துவரம் பருப்பு                                  -           அரை கப்

சின்ன வெங்காயம்  (அரிந்தது)      -         6

காய்ந்த மிளகாய்                             -         3

தக்காளி                                           -         1(பெரியது)

பூண்டு                                                           -              3 பல்

சீரகம்                                                               -              1 தேக்கரண்டி

கடுகு,                                                               -              1 தேக்கரண்டி

உளுத்தம் பருப்பு                                     -            அரை தேக்கரண்டி

உப்பு எண்ணெய்                                      -             தேவைக்கு

கெய்முறை

துவரம்பருப்பை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்

முருங்கைக்கீரையை கழுவி வைக்கவும்

வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உழுந்து தாளித்து வெங்காயம், மிளகாய், பூண்டு, தக்காளி போட்டு வதக்கவும்

இதனுள் தண்ணீரில் அலசிய கீரையைப் போட்டு 1 கப் நீர் சேர்த்து வேக வைக்கவும்

கீரை நன்றாக வெந்ததும் உப்பு, வேக வைத்த துவரம்பருப்பு சேர்த்து கொதிக்க விடவும்

 

பின்பு இறக்கி அனைவருக்கும் பரிமாறவும்.

 

Drumstick Health Benefits And Minerals

.