நச்சுக்கொட்டை கீரை கூட்டு
நச்சுக்கொட்டை கீரை - 10 இலை,
பயத்தம்பருப்பு - 1 கப்,
காய்ந்த மிளகாய் - 3,
கடலைப்பருப்பு - ஒன்றரை டீஸ்பூன்,
சீரகம் - அரை டீஸ்பூன்,
தேங்காய் த்துருவல் - 2 டீஸ்பூன்,
மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப,
வெங்காயம் - 2,
தக்காளி - 2,
கடுகு,தேங்காய் எண்ணெய் - தாளிக்க.
எப்படிச் செய்வது?
கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு, சீரகத்தை வறுத்து, தேங்காயுடன் சேர்த்து அரைக்கவும். கீரையைப் பொடியாக
நறுக்கி, பயத்தம்பருப்புடன் உப்பு சேர்த்து, நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து, குக்கரில் 2 விசில் வைக்கவும். பிறகு அரைத்த மசாலா, மஞ்சள்
தூள் சேர்த்து, தேவைப்பட்டால் இன்னும் சிறிது தண்ணீர் விட்டு வேக விடவும். கடைசியில் கடுகு தாளித்துச் சேர்க்கவும்.