பொன்னாங்கண்ணி புளித்த கீரை - மஞ்சூரியன் / Alternanthera Sessilis - Brown Indian hemp Manchurian

Posted in கீரை வகை ரெசிபிகள்


கிரேவிக்கு...

புளித்த கீரைபொன்னாங்கண்ணி சேர்த்து   -      2 கப்,

வெங்காயம்                             -      1,

தக்காளி                                   -      1,

பயத்தம் பருப்பு                     -      கால் கப்,

கரமசாலா தூள்                   -      அரை டீஸ்பூன்,

உப்பு                                 -      தேவைக்கேற்ப,

எலுமிச்சம்பழம்                    -      அரை மூடி,

தாளிக்க                            -      எண்ணெய்கடுகு,கறிவேப்பிலை 

மஞ்சூரியனுக்கு...

உப்பு சேர்த்து வேக வைத்த காலிஃப்ளவர்  -       1 கப்,

மஞ்சள்தூள்                         -      சிறிது,

சோள மாவு                        -      1 டீஸ்பூன்,

இஞ்சி   பூண்டு     விழுது          -      அரை டீஸ்பூன்,

எண்ணெய்                           -      பொரிக்க. 

செய்முறை:

*பயத்தம் பருப்புடன்கீரைநறுக்கிய வெங்காயம்தக்காளி சேர்த்து வேக வைத்துக் கடைந்து கொள்ளவும். எண்ணெயில் கடுகுகறிவேப்பிலை தாளித்துகீரையில் கொட்டிஎலுமிச்சைச்சாறு சேர்க்கவும். 

*காலிஃபிளவரில் எண்ணெய் தவிர்த்த எல்லாப் பொருள்களையும் சேர்த்துப் பிசறிசூடான எண்ணெயில் பொரித்தெடுத்துகீரைக் கடைசலில் சேர்த்துப் பரிமாறவும்.

 

.