முளை கீரை வடை-Amaranthus blitum vada

Posted in கீரை வகை ரெசிபிகள்

தேவையானவை:

உளுத்தம் பருப்பு    - 250 கிராம்,

முளைக்கீரை        - இரண்டு கைப்பிடி அளவு,

பச்சை மிளகாய்      - 2,

எண்ணெய்           - 500 மில்லி,

உப்பு                - தேவையான அளவு

செய்முறை:

உளுத்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து, களைந்து, தண்ணீர் வடிகட்டி, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து கெட்டியாக அரைக்கவும். கீரையை பொடியாக நறுக்கி இதனுடன் சேர்க்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து, மாவை வடைகளாக தட்டிப் போட்டு, பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும்.

குறிப்பு: இதே முறையில் காய்களை நறுக்கி சேர்த்தும் வடை தயாரிக்கலாம். இதற்கு சட்னி சிறந்த காம்பினேஷன்

.