நச்சுக்கொட்டை கீரை கூட்டு

Posted in கீரை வகை ரெசிபிகள்

நச்சுக்கொட்டை கீரை          -     10 இலை,

பயத்தம்பருப்பு                  -       1 கப்,

காய்ந்த மிளகாய்                             -          3,

கடலைப்பருப்பு                 -        ஒன்றரை டீஸ்பூன்,

சீரகம்                            -       அரை டீஸ்பூன்,

தேங்காய் த்துருவல்           -       2 டீஸ்பூன்,

மஞ்சள்தூள்                                   -      அரை டீஸ்பூன்,

உப்பு                             -     தேவைக்கேற்ப,

வெங்காயம்                       -       2,

தக்காளி                             -         2,

கடுகு,தேங்காய் எண்ணெய்  - தாளிக்க.

எப்படிச் செய்வது? 

கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு, சீரகத்தை வறுத்து, தேங்காயுடன் சேர்த்து அரைக்கவும். கீரையைப் பொடியாக

 நறுக்கி, பயத்தம்பருப்புடன் உப்பு சேர்த்து, நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து, குக்கரில் 2 விசில் வைக்கவும். பிறகு அரைத்த மசாலா, மஞ்சள் 

 

தூள் சேர்த்து, தேவைப்பட்டால் இன்னும் சிறிது தண்ணீர் விட்டு வேக விடவும். கடைசியில் கடுகு தாளித்துச் சேர்க்கவும்.

.