சிறுகீரை பொரியல் / Cirukira Fry

Posted in கீரை வகை ரெசிபிகள்

தேவையான பொருட்கள்

சிறுகீரை                        -       1 கட்டு

கடுகு,                       -      சிறிது

கறிவேப்பிலை             -      சிறிது

கடலைப்பருப்பு               -      சிறிது

உளுத்தம் பருப்பு              -       சிறிது

வெங்காயம்                 -      2

தேங்காய்  துருவல்        -       1 டேபிள்ஸ்பூன்

மிளகாய் தூள்                 -       1 டீஸ்பூன் 

செய்முறை:

*கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு, கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு தாளிக்கவும்.

*வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.

*கீரையை கழுவி பொடியாக நறுக்கி வைக்கவும்.

*பிறகு கீரையை சேர்த்து நன்கு வதக்கி, உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து சிறு தீயில் கடாயை மூடி வைத்து வேக விடவும்.

*நன்கு வெந்தவுடன், மூடியை எடுத்து விட்டு தண்ணீர் வற்றும் வரை கிளறி விட்டு, தேங்காய்த்துருவல் சேர்த்து கலந்து இறக்கவும்.

.