கோதுமை கீரை ஃப்ரை / Wheat Spinach Fry

Posted in கீரை வகை ரெசிபிகள்

தேவையான பொருட்கள்

கீரை                 -      ஒரு கப் (பொடியாக நறுக்கியது)

வெங்காயம்           -      1

மிளகு                    -      1/2 டீஸ்பூன்

கோதுமை மாவு      -      1 கப்  

செய்முறை:

*வாணலியில் தேவையான அளவு எண்ணெய் விட்டு கீரை, வெங்காயம் சேர்த்து வதக்கவும். மிளகை தூளாக்கி வைத்துக் கொள்ளவும். வதக்கிய கீரையை கோதுமை மாவில் சேர்த்து சப்பாத்தி பதத்துக்குப் பிசையவும்

 *மிளகுத் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும். தேவையான வடிவத்தில் சப்பாத்தி போல தேய்த்து எண்ணெயில் பொரித்து சாப்பிடலாம்.

.