பருப்புக் கீரை தக்காளி மசியல் / common purslane Tomato Puree

Posted in கீரை வகை ரெசிபிகள்

தேவையான பொருட்கள்

தக்காளி                    -      5

துவரம்பருப்பு               -      100 கிராம்

பருப்புக் கீரை           -       கட்டு

வடகம்                  -      சிறிதளவு

எண்ணெய்             -       தேக்கரண்டி

பச்சை மிளகாய்         -       4

பூண்டு                     -      பல்

பெருங்காயம்            -       அரை தேக்கரண்டி

மஞ்சள் தூள்            -       அரை தேக்கரண்டி

உப்பு                   -      தேவையான அளவு

செய்முறை:

*ஒரு குக்கரில் துவரம் பருப்புடன்தக்காளிபருப்பு கீரைபச்சை மிளகாய்பூண்டு அனைத்தையும் நன்கு கழுவுப் போட்டு பெருங்காயம்மஞ்சள்தூள்உப்பு சேர்த்துஒன்றரை டம்ளர் தண்ணீர் விட்டு மூன்று விசில் விட்டு வேக வையுங்கள்

*வெந்ததும்இதை ஒரு சட்டியில் விட்டு நன்றாக மசித்துக் கொள்ளுங்கள்

*எண்ணெயில் வடகத்தைப் போட்டுத் தாளித்து மசித்த கீரையில் விட்டு பரிமாறுங்கள் .

*இந்த பருப்புக் கீரை   தக்காளி மசியல்    மிகவும்  சத்தானது.

* பருப்புக் கீரை  குளிர்ச்சி உண்டாக்கும். சிறுநீரை பெருக்கும் (Diuretic) வறட்சியைப் போக்கும்.

Tomato Health Benefits And Minerals

.