சிறு பயத்தம் பருப்பு முருங்கைக்கீரை பொரியல் / Green gram Drumstick leaves Fry

Posted in கீரை வகை ரெசிபிகள்

 

 


தேவையான பொருட்கள்

ஆழ்ந்த முருங்கை கீரை           2கப்

பயத்தம் பருப்பு               -    1 கப்

காய்ந்த மிளகாய்                         2

தேங்காய் எண்ணெய்                   2டேபிள்ஸ்பூன்

தேங்காய்த்துருவல்                    1/2கப்

வெங்காயம் நறுக்கியது           2டேபிள்ஸ்பூன்

உப்பு                                         சுவைக்கு 

செய்முறை:

 குக்கரில் சிறு பயத்தம் பருப்பு (பாசிப்பருப்பை) விசில் வரும் முன்பே உதிரியாய் சுண்டலுக்கு வேக வைப்பது போல வேக வைத்து எடுத்து வைக்கவும்.

 வாணலியில் 1டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு வெங்காயத்தை நிறம் மாறாமல் வதக்கவும்.அத்துடன் மிளகாய் வற்றலை கிள்ளிப்போடவும்.

இதில் கால் கப் நீர்உப்பு சேர்க்கவும்.

கொதித்து பொங்கி வரும் பொழுது மீதமுள்ள எண்ணெயை நீரில் விட்டு கீரையை சேர்த்துக்கிளறி மூடியால் மூடி விடவும்.

அவ்வப்பொழுது கிளறி விட்டு நீர் முழுக்க வற்றியதும்,பாசிப்பருப்பு சுண்டலை அதனுடன் சேர்த்து வதக்கி தேங்காய்த்துருவலைப் போட்டு இறக்கவும்.

சூடாக சாதத்துடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்!!!

குறிப்பு:முருங்கை கீரையை நன்றாக வேக வைத்தே உண்ண வேண்டும்,வேகவில்லையென்றால் செரிமான கோளாறை உண்டாக்கும்.

 

.