பாலக்கீரை சீஸ் மேக்ரோனி / Palak Cheese Macaroni

Posted in கீரை வகை ரெசிபிகள்

தேவையான பொருட்கள்


நறுக்கிய பாலக்கீரை - 1/2 கப்
,

சங்கு போல் இருக்கும் மேக்ரோனி - 100 கிராம்(வேக வைத்தது)

சீஸ் - 2 துண்டுகள்

உப்பு, மிளகு தூள் - தேவைக்கேற்ப

சீரகம் - சிறிதளவு

வெண்ணெய் - 2 டீஸ்பூன்

பச்சை மிளகாய் - 2(பொடியாக நறுக்கியது)

செய்முறை:

*வெண்ணெயைக் காய்ச்சி சீரகம் தாளிக்கவும்.

*அதனுடன் பாலக்கீரை சேர்த்து நன்கு வதக்கவும்.

*மேக்ரோனி சேர்த்து நன்கு புரட்டி உப்பு, மிளகுத் தூள் சேர்க்கவும்.

*அத்துடன் பச்சை மிளகாயை சிறிது நேரம் வதக்கி, கிளறிக் கலந்து, மேலே துருவிய சீஸ் சேர்க்கவும்.

* இப்போது சுவையான பாலக்கீரை சீஸ் மேக்ரோனி ரெடி!! இது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.மிகவும் சத்தானதும் கூட!!!!

குறிப்பு: சிறுவர், சிறுமியருக்கும் பாலக்கீரை நல்லது. முளைக்கீரையை சாப்பிட்டால் நல்ல பசி எடுக்கும். காச நோயால் ஏற்படும் காய்ச்சலை நீக்கும் ஆற்றல் உடையது.

 

.