தயிர் மல்டி கீரை பச்சடி / Curds Multi Spinach Pachadi

Posted in கீரை வகை ரெசிபிகள்

தேவையான பொருட்கள்

ஆய்ந்துநறுக்கிய கீரைகள் (3 வகை) -     1 1/2 கப்,

கெட்டித் தயிர்                       -      2 கப்,

தேங்காய் த் துருவல்                 -      1 கப்,

பச்சை மிளகாய்                         -      4,

சீரகம்                              -      1/2 டீஸ்பூன்,

தேங்காய் எண்ணெய்                -      3 டீஸ்பூன்,

கடுகு,சீரகம்                         -      தாளிக்க தேவையான அளவு. 

செய்முறை:

*கீரை வகைகளை சிறிது நீரில் வேகவிடவும்.

*தயிரை சிலுப்பவும். தேங்காய்த் துருவல்சீரகம்பச்சை மிளகாய் இவற்றை மசிய அரைக்கவும்.

*கீரை,  அரைத்த மசாலாசிலுப்பிய தயிர் சேர்த்து கடாயில் ஒரு கொதி வரவிடவும்.

*தேங்காய் எண்ணெயில் கடுகுசீரகம் தாளித்துச் சேர்க்கவும்.

.