துவரம் பருப்பு அரைக்கீரை அடை / Pigeon Pea Araikkirai Aadai

Posted in கீரை வகை ரெசிபிகள்


தேவையான பொருட்கள்

நறுக்கிய கீரை - 1 கப்

பச்சரிசி - 1 கப்

துவரம் பருப்பு - 1 கப்

நறுக்கிய வெங்காயம்

 

சீரகம் - 1/2 டீஸ்பூன்

உப்பு, துருவிய இஞ்சி - தேவைக்கேற்ப

சிவப்பு மிளகாய் - தேவைக்கேற்ப

மஞ்சள்தூள் - 1 சிட்டிகை

தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன்

செய்முறை:

*துவரம் பருப்பை மற்றும் பச்சரிசியை 1/2 மணி நேரம் ஊறவைக்கவும்.

*பிறகு, சீரகம், உப்பு, மிளகாயுடன் துவரம் பருப்பு ,பச்சரிசியைசேர்த்து அரைக்கவும். அத்துடன் கீரை, வெங்காயம், இஞ்சி, தேங்காய்த் துருவல், மஞ்சள் தூள் சேர்த்து அரைக்க வேண்டும்.

*பின் தோசைக்கல்லை அடுப்பிலேற்றி, கல்லில் எண்ணை தடவி சூடாக்கவும். ஒரு பிளாஸ்டிக் ஷீட்டில் சிறிது எண்ணை தடவி, அதன் மேல் ஒரு உருண்டையை வைத்து வட்டமாகத் தட்டி, சூடான தோசைக்கல்லில் போட்டு, சிறிது எண்ணையை அடையைச் சுற்றி ஊற்றி இரு புறமும் நன்றாக வேகும் வரை திருப்பிப் போட்டு சுட்டெடுக்கவும்.

*இப்பேது கம கம துவரம் பருப்பு அரைக்கீரை அடை ரெடி!!!

குறிப்பு: இக்கீரையுடன் வெள்ளைப் பூண்டு, சீரகம், இஞ்சி, பச்சை மிளகாய் இவைகளைச் சேர்த்துக் கடைந்து சாதத்துடன் சேர்த்து, தினசரி உண்போர்க்கு வாயுத் தொந்தரவுகள் நீங்கிவிடும்.

.

.