கேழ்வரகு முருங்கைக்கீரை பகோடா / Ragi Drumstick leaves Pagoda

Posted in கீரை வகை ரெசிபிகள்

தேவையான பொருட்கள்

கேழ்வரகு மாவு               -        100 கிராம்

முருங்கை கீரை             -        1 பிடி

பூண்டு                         -        5 பல்

சோம்பு                         -        1 டீஸ்பூன்

பச்சை மிளகாய்              -        2

மைதா                        -        2 டேபிள்ஸ்பூன்

அரிசி மாவு                  -        1 டேபிள்ஸ்பூன்

பெரிய வெங்காயம்      -        1

உப்பு                            -        தேவையான அளவு        

தேங்காய் எண்ணெய்    -        பொரித்தெடுக்கத் தேவையான அளவு.

செய்முறை:

*முருங்கைக் கீரையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள்.

வெங்காயத்தையும் பொடியாக வெட்டிக் கொள்ளுங்கள். பூண்டுசோம்பு,  பச்சை மிளகாய் மூன்றையும் விழுதாக அரைத்துக் கொள்ளுங்கள்.

*கேழ்வரகு மாவுமைதாஅரிசி மாவு மூன்றையும் ஒன்றாக கலந்துநறுக்கி  வைத்துள்ள வெங்காயம்முருங்கைக்கீரைபூண்டு விழுதோடு உப்பும் சேர்த்து தண்ணீர் விட்டு வடைமாவு பதத்துக்குப் பிசைந்து கொள்ளவும். 

*அடுப்பில் எண்ணெயை வைத்து மிதமான சூட்டில்மாவை சிறிது சிறிதாகக் கிள்ளிப்போட்டு நன்றாக வெந்த பிறகு எடுங்கள். 

*சுவையான   கேழ்வரகு  முருங்கைக்கீரை  பகோடா  ரெடி!!

 

குறிப்பு:  முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும். வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மலசிக்கல் நீங்கும்.

 

.