புளிச்சக்கீரை துவையல் / Sorrel leaves Thuvaiyal

Posted in கீரை வகை ரெசிபிகள்

தேவையான பொருட்கள்

புளிச்சக்கீரை                 -       1 கட்டு

மிளகாய் தூள்               -       4 டீஸ்பூன்

உப்பு                              -       தேவையான அளவு

வெந்தயம்                     -       அரை டீஸ்பூன்

நல்லெண்ணெய்             -       100 மில்லி

கடுகு,                            -       தாளிக்கும் அளவுக்கு

காயத் தூள்                   -       கால் டீஸ்பூன் 

செய்துறை:

*புளிச்சக்கீரையை நன்றாக அலசிதண்ணீர் காயும்வரை நிழலில் உலர்த்தி பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள்.

*வாணலியை அடுப்பில் வைத்து  எண்ணெய் விட்டுகடுகு போட்டுத் தாளியுங்கள்.

*கடுகு வெடிக்கும் தருணத்தில்புளிச்சக்கீரையைக் கொட்டி கிளறுங்கள்.

*கீரை சுருண்டு வரும்போது,  மிளகாய்த்தூள்வெந்தயத்தூள்உப்புபெருங்காயத்தூள் போட்டு நன்றாக கிளறுங்கள்.

*எண்ணெய் பிரிந்துதொக்கு பதத்துக்கு வந்ததும் இறக்குங்கள்.  கோங்கூரா தொக்கு ரெடி.!!!

குறிப்பு:   புளிச்சக்கீரையை அரைத்து கட்டிகள் மீது கட்டினால் கட்டிகள் உடைந்துபோகும்.

.