பசலக்கீரை கிரேவி /Spinach Gravy

Posted in கீரை வகை ரெசிபிகள்

தேவையான பொருட்கள்

பாலக் கீரை                         -      4 கட்டு,

சோளம்                            -      1 கப்,

வெங்காயம்                      -      அரை கிலோ,

இஞ்சி                              -      1 துண்டு,

பூண்டு                            -      4 பல்,

பச்சை மிளகாய்                   -        3,

மல்லித் தூள்                      -      2 டீஸ்பூன்,

கரமசாலா தூள்                   -      2 டீஸ்பூன்,

மிளகாய் தூள்                     -      4 டீஸ்பூன்,

உப்பு                                -      தேவைக்கேற்ப,

கிரீம் (அ) கெட்டிப் பால்            -       சிறிது,

தேங்காய் எண்ணெய்               -      கால் கப்,

சீரகம்                              -      1 டீஸ்பூன்,

பே லீஃப்                          -        1

வெண்ணெய்                      -      சிறிது,

மல்லித்தளை                      -      சிறிது,

தக்காளி                            -      கால் கிலோ.

 விழுதாக அரைக்க:

முந்திரி பருப்பு               -      2 டே.ஸ்,

கசகசா                         -      1 டேபிள் ஸ்பூன்,

தேங்காய்  துருவல்          -      1 டேபிள்ஸ்பூன்.  

செய்முறை:

*கீரையை நறுக்கிவெண்ணெயில் வதக்கிதண்ணீர் சேர்த்து பிரஷர் குக்கரில் 1 விசில் வைத்துஆறியதும் மிக்சியில் அரைக்கவும்.

*கடாயில் எண்ணெய் ஊற்றிசீரகம்பிரிஞ்சி இலை சேர்த்து தாளிக்கவும். 

*வெங்காயம்பச்சை மிளகாய்இஞ்சிபூண்டு விழுதைச் சேர்த்து பொன்னிறத்துக்கு வதக்கவும்.

*கசகசாமுந்திரி விழுது சேர்த்துபச்சை வாடை போக வதக்கவும். பொடிகளைச் சேர்த்து வறுக்கவும்.

*தக்காளி துருவிச் சேர்த்துஉப்பு போட்டுத் தளதளவெனக் கொதிக்கவிடவும். 

*மசித்த பாலக்அது வெந்த தண்ணீரும் சேர்த்துக் கொதிக்கையில்ஸ்வீட் கார்ன் சேர்த்துக் கொதிக்க விடவும். கலவை நன்கு சேர்ந்ததும்இறக்கிகொத்தமல்லிகிரீம் அல்லது கெட்டிப்பால் சேர்த்துப் பரிமாறவும். 

*பாலக்கீரை கவனம்  சிதறாமல் இருக்க  உதவுகிறது.

.