பாலக் கீரை சூப் / SPINACH SOUP

Posted in கீரை வகை ரெசிபிகள்

தேவையான பொருட்கள்

பாலக் கீரை          –        2 கப்

வெங்காயம்          –        1/4 கப்

பூண்டு               –        3

கடலை மாவு        –        1 மேஜைக்கரண்டி

ஜீரகத் தூள்          –        1/4 தேக்கரண்டி

பே லீஃப்             –        1 (சிறியது) 

நீர்                    –        2 கப்

ஆலிவ் ஆயில்       –        1.5 மேஜைக்கரண்டி

நல்ல மிளகு தூள்    –        விரும்பினால்

உப்பு                 –        தேவையான அளவு

நல்ல மிளகு         -       தேவையான அளவு

செய்முறை

பாலக் கீரையை நீரால் நன்கு கழுவிக் கொள்ளவும்.

சிறியதாக நறுக்கி தனியே வைக்கவும்.

கடாயில் எண்ணெய் அல்லது பட்டர் விட்டு சூடானதும் பே லீஃப் சேர்த்து வதக்கவும்.

பின்பு பூண்டு சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

1/4 கப் வெங்காயம் சேர்க்கவும்.

வெங்காயம் மென்மையாகும் வரை வதக்கவும்.

நறுக்கிய பாலக் கீரை சேர்க்கவும்.

நல்ல மிளகு மற்றும் உப்பு சேர்க்கவும்.

கடலை மாவு சேர்க்கவும்.

நன்கு கிளறவும்.

2 கப் நீர் சேர்க்கவும்.

கொதிக்க வைக்கவும். பின்பு 3-4 நிமிடங்கள் சிம்மில் வைக்கவும்.

ஜீரகத் தூள் சேர்க்கவும்.

நன்கு கலக்கவும்.

பின்பு தீயை அணைத்து விட்டு ஆற வைக்கவும்.

பின்பு பே லீஃபை நீக்கி விடவும்.

சூப்பினை மிக்சியில் விட்டு மென்மையாக அரைத்துக் கொள்ளவும்.

சுவையை சரிபார்த்து உப்பு மற்றும் நல்ல மிளகு தூள் சேர்க்கவும்.

மீண்டும் தேவையான அளவு நீர் சேர்த்து நன்கு கலக்கவும்.

பின்பு சூப்பை 3 நிமிடம் சிம்மில் வைக்கவும்

 

பாலக் கீரை சூப் ரெடி!!!!!!!!

.