உருளைக் கிழங்கு வெந்தயக் கீரை ஃப்ரை / POTATO SPINACH FRY / PALAK POTATO FRY

Posted in கீரை வகை ரெசிபிகள்

தேவையான பொருட்கள்

உருளைக் கிழங்கு     –       2 கப்

வெந்தயக் கீரை       –        11/2 கப்

பூண்டு                -       2 பற்கள்

ஜீரகம்                –        3/4 தேக்கரண்டி

எண்ணெய்            –        11/2 தேக்கரண்டி

உப்பு                 –        தேவையான அளவு

பச்சை மிளகாய்      –        2

மஞ்சள் தூள்         –        ஒரு சிட்டிகை

பெருங்காயம்         –        ஒரு சிட்டிகை

கரம் மசாலா தூள்    –        2 தேக்கரண்டி

செய்முறை

வெந்தயக் கீரை இலைகளை 2 – 3 முறை நீரில் நன்கு கழுவிக் கொள்ளவும். ஊருளைக் கிழங்கை தோல் நீக்கி நறுக்கிக் கொள்ளவும். பின்பு அதனுடன் நீர் சேர்த்து தனியே வைக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு ஜீரகம் மற்றும் பூண்டு சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும். பின்பு பெருங்காயம் சேர்க்கவும்.

உருளைக் கிழங்கு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து 2 நிமிடங்கள் வைக்கவும்

நீர் சேர்த்து உருளைக் கிழங்கை வேக வைக்கவும்.

மூடி வைத்து வேக வைக்கவும்.

நீா் முழுவதும் ஆவியானதும் கரம் மசாலா மற்றும் உப்பு சேர்க்கவும். 2 நிமிடங்கள் நன்கு கிளறவும்

நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் வெந்தயக் கீரை சேர்க்கவும். சிறிது நேரம் நன்கு கிளறவும்.

 

உருளைக் கிழங்கு வெந்தயக் கீரை ஃப்ரை ரெடி!!!!!!!

.