முருங்கை கீரை சூப் / DRUMSTICK LEAVES SOUP

Posted in கீரை வகை ரெசிபிகள்

தேவையான பொருட்கள்

நெய்                    –        1 தேக்கரண்டி

ஜீரகம்                   –        ½ தேக்கரண்டி

பூண்டு                   –        5 பொரிய பற்கள்

இஞ்சி                   –        1 மேஜைக்கரண்டி

சின்ன வெங்காயம்       –        4 (நறுக்கியது)

தக்காளி                 –        1 (நறுக்கியது)

முருங்கை கீரை         –        4 கப்

நீர்                      –        6 கப்

உப்பு                    –        தேவையான அளவு

நல்ல மிளகு             –        தேவையான அளவு

செய்முறை

தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்

முருங்கை கீரையை நன்கு கழுவி சுத்தம் செய்யவும்

கடாயில் எண்ணெய் விட்டு சூடாக்கவும்

ஜீரகம் சேர்க்கவும்

பூண்டு சேர்க்கவும்

துருவிய இஞ்சி சேர்க்கவும்

சிறிது நேரம் வதக்கவும்

சின்ன வெங்காயம் சேர்க்கவும்

பொன்னிறமாகும் வரை வதக்கவும்

தக்காளி சேர்த்து மசியும் வரை வதக்கவும்

முருங்கை கீரை சேர்த்து நன்கு கிளறவும்

நீர் சேர்த்து நன்கு கலக்கி 10 நிமிடம் வேக வைக்கவும்

உப்பு மற்றும் நல்ல மிளகு தூள் சேர்க்கவும்

நன்கு கலக்கவும்

பின்பு பரிமாறவும்

.