பசலைக்கீரை பன்னீர் / Spinach Paneer

Posted in கீரை வகை ரெசிபிகள்

 


 தேவையான பொருட்கள்

பாலக் கீரை                                   -      2 கட்டு,

பன்னீர் துண்டுகள்                  -      2 கப்,

வெங்காயம்                        -      கால் கிலோ,

தக்காளி                                  -      கால் கிலோ,

உப்பு                                                    -      தேவைக்கேற்ப,

மிளகாய் தூள்                        -      4 டீஸ்பூன்,

மஞ்சள்தூள்                                   -      1 டீஸ்பூன்,

கரமசாலா தூள்                      -      1 டீஸ்பூன்,

நறுக்கிய மல்லித்தளை       -       சிறிது. 

விழுதாக அரைக்க:

இஞ்சி                                      -      1 துண்டு,

பூண்டு                                             -      8 பல்,

காய்ந்த மிளகாய்                    -       1

பட்டை                                     -      1. 

தாளிக்க: 

எண்ணெய்                                      -      கால் கப்,

சீரகம்                                     -      2 டீஸ்பூன்,

பே லீஃப்                                            -      1. 

செய்முறை:

•பாலக் கீரையைக் கழுவிநறுக்கிபிரஷர் குக்கரில் வேக வைத்து மசித்துக் கொள்ளவும்.

•தக்காளியை விழுதாக அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டுதாளிப்புப் பொருள்களைச் சேர்த்துஅரைத்த விழுது சேர்த்து பொன்னிறத்துக்கு வதக்கவும். 

•உப்புமஞ்சள் தூள்மிளகாய் தூள்கரம் மசாலா சேர்த்து மேலும் வதக்கவும். தக்காளி விழுது சேர்த்துத் தளதளவெனக் கொதிக்கும் போதுபாலக் விழுது சேர்த்துஇன்னும் சிறிது உப்பு சேர்த்து இரண்டும் கலந்து கொதித்ததும்நறுக்கிய கொத்தமல்லிபனீர் துண்டுகள்தண்ணீர் (தேவைப்பட்டால்) சேர்த்துக் கொதிக்க விட்டு இறக்கிப் பரிமாறவும்.

குறிப்பு: பாலக்கீரைலுள்ள விட்டமின் ஏ பார்வைக் கோளாறை தடுப்பதோடு சோர்வை நீக்கி, ரத்த விருத்திக்கும் உதவுகிறது.

 

 

.