பாலக் கீரை பொரியல் / SPINACH FRY / PALAK KEERAI FRY

Posted in கீரை வகை ரெசிபிகள்

தேவையான பொருட்கள்

பாலக்கீரை              -       ஒரு கட்டு

சின்ன வெங்காயம்       -       20 எண்ணிக்கை

காய்ந்த மிளகாய்          -       2

ஜீரகம்                   -       கால் தேக்கரண்டி

கடுகு,                   -       கால் தேக்கரண்டி

உழுத்தம் பருப்பு         -       கால் தேக்கரண்டி

தேங்காய்  துண்டு       -       ஒன்று (சிறியது, துருவிக் கொள்ளவும்)

பாசிப்பருப்பு              -       50 கிராம் (வறுத்து வேக வைத்தது)

உப்பு                      -       தேவைக்கு

தேங்காய் எண்ணெய்    -       2 தேக்கரண்டி

செய்முறை

கீரையை சுத்தப்படுத்தி நறுக்கி கழுவி வைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை நறுக்கி வைக்கவும். மிளகாயை கிள்ளி வைக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, சீரகம், மிளகாய் சேர்த்து சிவக்க விடவும்.

இதில் நறுக்கிய வெங்காயம் போட்டு வெங்காயம் வதங்கியதும் கீரையை போட்டு மூடி சிறுதீயில் வேக விடவும்.

கீரை வெந்ததும் வேக வைத்த பாசிப்பருப்பு, உப்பு சேர்த்து கிளறி விட்டு தேங்காய் துருவலைப் போட்டு இறக்கவும்.

சுவையான பாலக் பருப்பு பொரியல் தயார்.

.