வல்லாரை கீரை கூட்டு / WATER CRESS KOOTU

Posted in கீரை வகை ரெசிபிகள்

தேவையான பொருட்கள்

வல்லாரை கீரை        –        2 கப்

பாசி பருப்பு              –        ½கப்

தக்காளி                 –        1

பூண்டு                  –        2 பற்கள்

மஞ்சள் தூள்            –        1 தேக்கரண்டி

உப்பு                    –        தேவையான அளவு

சர்க்கரை                –        ½தேக்கரண்டி

அரைக்க

தேங்காய்              -          ½கப் (துருவியது)

வத்தல் மிளகாய்       –         2

சீரகம்                  –        1 தேக்கரண்டி

அரிசி மாவு             –        1 மேஜைக்கரண்டி

தாளிக்க

எண்ணெய்              –        1 தேக்கரண்டி

கடுகு,                  –        1 தேக்கரண்டி

சீரகம்                  –           ½தேக்கரண்டி

உளுத்தம் பருப்பு       -          தேக்கரண்டி

பெருங்காயம்          –           ¼ தேக்கரண்டி

கறிவேப்பிலை         –       1 கொத்து

செய்முறை

தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்

தேங்காய் துருவல், ஜீரகம் மற்றும் வத்தல் மிளகாயை மிக்சியில் எடுத்துக் கொள்ளவும்

அரிசி மாவு சேர்க்கவும்

மென்மையான விழுதாக அரைத்துக் கொள்ளவும்

பாசிப் பருப்பை பிரஷர் குக்கரில் எடுத்துக் கொள்ளவும்

நறுக்கிய வல்லாரை கீரையை சேர்க்கவும்

 

தக்காளி மற்றும் பூண்டுசேர்க்கவும்

மஞ்சள் தூள் மற்றும் நீர் சேர்த்து வேக வைக்கவும்

அனைத்தும் வெந்து விட்டது

பின்பு அதனை இறக்கி வைக்கவும்

சிறிது உப்பு சேர்க்கவும்

அரைத்த மசாலா விழுதை சேர்க்கவும்

சர்க்கரை சேர்க்கவும்

பின்பு அவற்றை கொதிக்க வைக்கவும்

பின்பு நன்கு கலக்கி மீண்டும் சிறிது நேரம் வேக வைக்கவும்

பின்பு சிறிது எண்ணெய் சூடாக்கவும்

தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்துக் கொள்ளவும்

பின்பு அதனை கூட்டுடன் சேர்த்து நன்கு கலக்கவும்

 

பின்பு பரிமாறவும்

WATER CRESS HEALTH BENEFITS AND MINERALS

.