வல்லாரை கீரை சாம்பார் / WATERCRESS SAMBAR

Posted in கீரை வகை ரெசிபிகள்

தேவையான பொருட்கள்

சின்ன வெங்காயம்              –        10

பூண்டு                       –        6 பற்கள்

வல்லாரை கீரை             –        3 கப்

நீர்                           –        தேவையான அளவு

புளி                          –        3 மேஜைக்கரண்டி

மல்லித் தூள்                 -       2 மேஜைக்கரண்டி

மிளகாய் தூள்                -       2 மேஜைக்கரண்டி

உப்பு                         –        தேவையான அளவு

சர்க்கரை                     –        1 தேக்கரண்டி

பருப்பை வேக வைக்க

துவரம் பருப்பு                –        ½ கப்

மஞ்சள் தூள்                 –        1 தேக்கரண்டி

சீரகம்                       –        1 தேக்கரண்டி

தாளிக்க

எண்ணெய்                   –        1 மேஜைக்கரண்டி

கடுகு,                        -       1 தேக்கரண்டி

சீரகம்                       –        1 தேக்கரண்டி

உளுத்தம் பருப்பு              –        1 தேக்கரண்டி

பெருங்காயம்                 –        ¼ தேக்கரண்டி

வத்தல் மிளகாய்              –        1

செய்முறை

தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்

வல்லாரை கீரையை எடுத்துக் கொள்ளவும்

கீரையை சிறிதாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம் மற்றும் பூண்டை தோலுரித்துக் கொள்ளவும்

பின்பு துவரம் பருப்புடன் மஞ்சள் தூள், ஜீரகம் மற்றும் நீா் சேர்த்து கொதிக்க வைக்கவும்

கடாயில் எண்ணெய் விட்டு சூடாக்கவும்

ஜீரகம் கடுகு, உழுத்தம் பருப்பு, பெருங்காயம் மற்றும் வத்தல் மிளகாய் சேர்க்கவும்

வெங்காயம் மற்றும் பூண்டு சேர்க்கவும்

சிறிது நேரம் வதக்கவும்

பின்பு நறுக்கிய கீரை சேர்க்கவும்

சிறிது நேரம் வதக்கவும்

பின்பு சிறிது நீர் சேர்த்து நன்கு கலக்கவும்

அவற்றை கொதிக்க வைக்கவும்

மல்லித் தூள் சேர்க்கவும்

மிளகாய் தூள் சேர்க்கவும்

புளி தண்ணீர் சேர்க்கவும்

நன்கு கலக்கவும்

பின்பு அதனை கொதிக்க வைக்கவும்

பின்பு வேக வைத்த பருப்பை அதனுடன் சேர்க்கவும்

நன்கு கலக்கவும்

சிறிது உப்பு மற்றும் சர்க்கரை சேர்க்கவும்

சிறிது நேரம் சிம்மில் வைக்கவும்

 

வல்லாரை கீரை சாம்பார் ரெடி!!!!!!!!!!!!!!

WATER CRESS HEALTH BENEFITS AND MINERALS

.