சிவப்புக் கீரை பொரியல் / RED AMARANTHUS FRY

Posted in கீரை வகை ரெசிபிகள்

தேவையான பொருட்கள்

கீரை                        –        4 கப் (நறுக்கியது)

தேங்காய் எண்ணெய்        –        1 தேக்கரண்டி

கடுகு,                       –        1 தேக்கரண்டி

உளுத்தம் பருப்பு             –        1 தேக்கரண்டி

காய்ந்த மிளகாய்                 –        2

வெங்காயம்                   –        1

பூண்டு                       –        4 - 5 பற்கள்

மிளகாய் தூள்               –        2 தேக்கரண்டி

மஞ்சள்தூள்                 –        1 தேக்கரண்டி

உப்பு                        –        தேவையான அளவு

தேங்காய்                   –        ½ கப் (துருவியது)

செய்முறை

கீரையை எடுத்துக் கொள்ளவும்

தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்

கடாயில் எண்ணெய் விட்டு சூடாக்கவும்

தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்துக் கொள்ளவும்

சிறிது நேரம் பொரிக்கவும்


பின்பு  வெங்காயம் மற்றும் பூண்டு சேர்க்கவும்

சிறிது நேரம் வதக்கவும்

உப்பு, மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்க்கவும்

30 வினாடிகள் வதக்கவும்

பின்பு கீரையை சேர்க்கவும்

சிறிது நேரம் வேக வைக்கவும்

கீரை வெந்து விட்டது

பின்பு தேங்காய் துருவல் சேர்க்கவும்

5 நிமிடம் நன்கு கிளறவும்

 

பின்பு பரிமாறவும்

.