முருங்கை கீரை பொரியல் / Drumstick leaves Fry

Posted in கீரை வகை ரெசிபிகள்

தேவையான பொருட்கள்

முருங்கை கீரை          -      1 கட்டு

வெங்காயம்             -      பாதி

காய்ந்த மிளகாய்             -      4அல்லது காரத்துக்கேற்ப

தேங்காய் த் துருவல்     -      1 1/2ஸ்பூன்

கடுகு,                       -      1/2ஸ்பூன்

கடலைப்பருப்பு            -      1/2ஸ்பூன்

உளுத்தம் பருப்பு         -      1/2ஸ்பூன்

உப்பு                         -      சுவைக்கேற்ப

சர்க்கரை                   -      ஒரு சிட்டிகை

செய்முறை

கீரையை கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.வெங்காயத்தை நறுக்கிகொள்ளவும்.மிளகாயை ஒன்றிரண்டாக உடைத்துக் கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் காய வைத்து கடுகு,கடலை பருப்பு,உழுத்தம் பருப்பு தாளித்து, வெங்காயம்,மிளகாய் வற்றல் சேர்த்து வதக்கவும்.வெங்காயம் வதங்கியதும் கீரையைச் சேர்க்கவும்.

ஒரு சிட்டிகை சர்க்கரை சேர்த்து கிளறிவிட்டு, தண்ணீர் தெளித்து வேக விடவும். கீரை வெந்ததும் தேவையான உப்பு சேர்த்து கலக்கி தேங்காய்த் துருவல் சேர்த்து இறக்கவும்.

இது சப்பாத்திக்கும் நன்றாக மேட்ச் ஆகும்..சாதத்துடனும் சாப்பிடலாம்.

.