முள்ளங்கி பொரியல் / Radish Fry

Posted in முள்ளங்கி ரெசிபி

தேவையான பொருட்கள்:-

முள்ளங்கி           -      3 கப் (பொடியாக அரிந்தது)

வெங்காயம்         -       1

பச்சை மிளகாய்       -       2

உப்பு                 -     தேவைக்கு ஏற்ப

தேங்காய்            -      சிறிதளவு

மல்லித்தளை      -     சிறிதளவு

தாளிக்க:-

தேங்காய் எண்ணெய் 

கடலை பருப்பு

உளுந்து

பெருங்காயத்தூள்

சீரகம்

கடுகு,

கறிவேப்பிலை 

செய்முறை:-

முள்ளங்கி மற்றும் வெங்காயத்தை சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பச்சைமிளகாயை இரண்டிரண்டாக நறுக்கவும்

வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி கடுகு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை தாளிக்கவும். அதனுடன் உளுந்து, கடலை பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.

அதில் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்

வெங்காயம் நன்கு வதங்கியதும் பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.

முள்ளங்கியுடன் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து தண்ணீர் தெளித்து வேக வைக்கவும்.

அடுப்பை அணைத்து கொத்தமல்லி, தேங்காய் துருவல் சேர்த்து இறக்கவும்.சுவையான முள்ளங்கி பொரியல் ரெடி.

உடல் வீக்கத்தால் அவதியா? குணமாக்கும் முள்ளங்கி

Radish Health Benefits And Minerals

.