முள்ளங்கி கடலைப்பருப்பு பொரியல் / RADISH CHANNA DAL FRY

Posted in முள்ளங்கி ரெசிபி

தேவையான பொருட்கள்

முள்ளங்கி                 -       2

கடலைப்பருப்பு          -       1/2 கப்

காய்ந்த மிளகாய்        -      5

பெரிய வெங்காயம்   -  பாதி

இஞ்சி                           ஒரு சிறு துண்டு

பூண்டு                    -       முதல் 4 வரை

தேங்காய் த்துருவல்  -       டேபிள்ஸ்பூன்

கறிவேப்பிலை                சிறிது

தேங்காய் எண்ணெய்-       டேபிள்ஸ்பூன்

கடுகு,                      -       1/2 டீஸ்பூன்

உப்பு                  -       டீஸ்பூண் அல்லது தேவைக்கேற்றவாறு

எப்படிச் செய்வது

கடலைப்பருப்பை ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.

முள்ளங்கியைத் தோல் சீவி நடுத்தர அளவு துண்டுகளாக வெட்டவும்

வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்

ஊறவைத்த கடலைப்பருப்புமுள்ளங்கித்துண்டுகள்மிளகாய்உப்பு    அக்கியவற்றை ஒன்றாகப் போட்டு வடைக்கு அரைப்பது போல் சற்று    கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்

இட்லித் தட்டில் சிறிது எண்ணைத் தடவி அதில் அரைத்த விழுதை ஒவ்வொரு    தட்டிலும் வைத்து பத்து அல்லது பதினைந்து நிமிடங்கள் ஆவியில் வேக    விடவும்பின்னர் இறக்கி வைத்து ஆறியதும் இட்லி தட்டிலிருந்து எடுத்து       உதிர்த்துக் கொள்ளவும்

ஒரு வாணலியில் எண்ணை விட்டுகாய்ந்ததும் கடுகு சேர்க்கவும்கடுகு    வெடித்தவுடன் அதில் நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.    வெங்காயம் வதங்கியவுடன் அதில் இஞ்சிபூண்டு ஆகியவற்றைத் தட்டிப்       போடவும்

 கறிவேப்பிலையும் போட்டு மீண்டும் வதக்கவும்இப்பொழுது உதிர்த்து    வைத்துள்ள முள்ளங்கிப் பருப்பைப் போட்டு கிளறி விடவும்அடுப்பை சிறு தீயில்    வைத்து 5 முதல் 10 நிமிடங்கள் வரை அடிக்கடி கிளறி விட்டு பின்னர் அதில்     தேங்காய்த்துருவலைச் சேர்த்துக் கிளறி இறக்கி வைக்கவும்.

Radish Health Benefits And Minerals 

.