முள்ளங்கி குடைமிளகாய் மசாலா / RADISH CAPSICUM MASALA
தேவையான பொருட்கள்
முள்ளங்கி - 2 (பெரியதாக நறுக்கியது)
குடை மிளகாய் - 1
வெங்காயம் - 1(பெரியதாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2
இஞ்சி-பூண்டு விழுது - 1 மேஜைக்கரண்டி
சோம்பு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
மல்லித் தூள் - 1 மேஜைக்கரண்டி
மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி
கரமசாலா தூள் - 1 தேக்கரண்டி
தேங்காய் எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
சர்க்கரை - 1 தேக்கரண்டி
அரைக்க
கச கசா - 1 மேஜைக்கரண்டி
முந்திரிபருப்பு - 10
செய்முறை
தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்
முள்ளங்கியை எடுத்துக் கொள்ளவும்
நறுக்க வேண்டிய பொருட்களை நறுக்கிக் கொள்ளவும்
பிரசர் குக்கரில் எண்ணெய் விட்டு சூடாக்கவும்
அதில் சோம்பு சேர்க்கவும்
பின்பு ஜீரகம் சேர்க்கவும்
பின்பு அதனுடன் சிறிது வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்க்கவும்
பின்பு அதனை சிறிது நேரம் வதக்கவும்
அதனுடன் சிறிது இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்
சிறிது நேரம் வதக்கவும்
பின்பு அதனுடன் குடை மிளகாய் மற்றும் முள்ளங்கி சேர்க்கவும்
நன்கு கிளறவும்
பின்பு உப்பு சேர்க்கவும்
பின்பு அதனுடன் மசாலா தூள்களை சேர்க்கவும்
பின்பு தக்காளி சேர்க்கவும்
பின்பு கரம் மசாலா தூள் சேர்க்கவும்
நன்கு கலக்கவும்
அதனுடன் சிறிது நீர் சேர்க்கவும்
நன்கு கலக்கவும்
பின்பு அதனை மூடி வைத்து வேக வைக்கவும்
இப்போது முள்ளங்கி வெந்து விட்டது
பின்பு கசகசா மற்றும் முந்திரியை எடுத்துக் கொள்ளவும்
நீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்
பின்பு அதனை குழம்புடன் சேர்க்கவும்
பின்பு அதனுடன் சிறிது சர்க்கரை சேர்க்கவும்
குழம்பு கெட்டியாகும் வரை வேக வைக்கவும்
பின்பு பரிமாறவும்