நிலக்கடலை சுண்டல் (groundnut seed sundal)

Posted in தானிய வகை ரெசிபிகள்

தேவையான பொருள்கள்:

நிலக்கடலை                  –      1 கிலோ

பச்சை மிளகாய்                  –      5

இஞ்சி                        –      சிறிய துண்டு (விரும்பினால்)

தேங்காய்                    –      1 1/2 கப்

எள்                          -      1 டேபிள்ஸ்பூன்

கச கசா                       –      1 டேபிள்ஸ்பூன்

உப்பு                         –      தேவையான அளவு

தாளிக்க:

எண்ணெய்கடுகுஒரு காய்ந்த மிளகாய்பெருங்காயம்கறிவேப்பிலை.

செய்முறை:

நிலக்கடலையை இரண்டு மணிநேரம் தண்ணீரில் ஊறவைத்து நீரை வடிக்கவும்.

ஊறிய கடலையை ஒரு கப் தண்ணீர் சேர்த்து, குக்கரில் 3 விசில் வரை வைத்து நன்கு வேகவைத்து, மீண்டும் நீரை வடிக்கவும்.

எள், கசகசாவை வறட்டு வாணலியில் நன்கு வறுத்து மிக்ஸியில் நைசாகப் பொடிக்கவும். (வறுக்காவிடில் கசகசா மசியாது.)

இஞ்சி, பச்சை மிளகாய், தேங்காயை உப்பு சேர்த்து, தண்ணீர் விடாமல் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.

அடுப்பில் வாணலியில் எண்ணெய் வைத்து கடுகு, காய்ந்த மிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலை தாளிக்கவும்.

வேகவைத்த கடலை, அரைத்த விழுது சேர்த்து நன்கு நீர்ப்பசை இல்லாதவாறு வதக்கவும்.

இறக்கும் முன் அரைத்த பொடியைத் தூவி மேலும் இரண்டு நிமிடங்கள் கிளறி இறக்கவும்

Sweet Corn Health Benefits And Minerals

.