பச்சைப் பயறு அரிசி தேசை / Green Pieas Rice Dossa

Posted in தானிய வகை ரெசிபிகள்

தேவையான பொருட்கள்

பச்சைப் பயறு              -       2 கப்

பச்சரிசி                    -     சிறிதளவு

பெரிய வெங்காயம்          -      2

பச்சை மிளகாய்              -      3

இஞ்சி                     -      சிறு துண்டு

சீரகம்                      -      1 டீஸ்பூன்

உப்பு                      -      தேவையான அளவு

பெருங்காயம்              -      சிறிதளவு

கறிவேப்பிலை             -      சிறிதளவு

எண்ணெய்                -      சிறிதளவு. 

செய்முறை:

*பச்சைப்பயறையும் அரிசியையும் நன்கு கழுவி 6 மணிநேரம் ஊறவையுங்கள். *இரண்டையும் ஒன்றாக்கி 1 பச்சைமிளகாய்இஞ்சிஒரு வெங்காயம்,  பெருங்காயம் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். அரைத்த மாவில் உப்பு சேர்த்து கரைத்துக் கொள்ளுங்கள்.

*இன்னொரு வெங்காயத்தையும்மீதமுள்ள  பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். 

*வாணலியில் எண்ணெய்விட்டு சீரகம்வெங்காயம்கறிவேப்பிலை போட்டு வதக்கி அதையும் மாவில் கலந்து கொள்ளுங்கள்.

*தோசைக்கல்லில்  லேசாக எண்ணெய் தேய்த்து மாவை ஊற்றி மெலிதாக பரப்பி வேகவையுங்கள். கமகமக்கும் ஆந்திர ஸ்பெஷல் பெசரட்டு ரெடி.

*வதக்கிய  அயிட்டங்களை மாவில் சேர்க்காமல் தோசைமேல் தூவியும் வேகவைக்கலாம். அலங்காரத்துக்கு அலங்காரமும் ஆயிற்று... கூடுதல் ருசியும் ஆயிற்று! 

*இப்போது கமகமக்கும் பச்சைப் பயறு அரிசி தேசை   ரெடி !! இதை ஆந்திராவில் பெஷல்  பெசரட்டு  என்றுகூறுவர்.

Curry Leaves Health Benefits and Minerals

.