சோயா புலாவ் / Soya Pulao

Posted in தானிய வகை ரெசிபிகள்

தேவையான பொருட்கள்

சோயா பருப்பு            -      1 கப்

கைக்குத்தல் அரிசி        -      2 கப்

பச்சை மிளகாய்          -      3

இஞ்சித் துருவல்         -      1 டீஸ்பூன்

சீரகம்                    -      1 டீஸ்பூன்

சீரகம் தூள்               -      2 டீஸ்பூன்

பெரிய வெங்காயம்       -      3

ஏலக்காய்                 -      3

முந்திரி பருப்பு           -      4

எண்ணெய்               -      தேவைக்கேற்ப

கொத்தமல்லித் தழை      -      அலங்கரிக்க

செய்முறை:

*சோயாவை 6 மணி நேரம் ஊற வைத்துவேக வைத்துக் கொள்ளவும்.

*கைக்குத்தல் அரிசியை 5 மணி நேரம் ஊற வைத்து2 பங்கு தண்ணீர் விட்டுவழக்கமாக சாதம் வடிக்கிற நேரத்தைவிட20 நிமிடங்கள் கூடுதலாக வேக வைத்துக் கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் விட்டுசீரகம்நறுக்கிய பச்சை மிளகாய்இஞ்சித் துருவல்நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

*முந்திரிஏலக்காய் சேர்த்து வதக்கிவேக வைத்துள்ள சோயா பருப்பையும் சேர்த்து நன்கு வதக்கவும். தண்ணீர் வற்றிவதங்கியதும்தயாராக உள்ள சாதம்உப்புசீரகத் தூள் சேர்த்துக் கலந்துகொத்தமல்லி தூவிப் பரிமாறவும். 

குறிப்பு:

பெண்களுக்கான உணவுவகைகளில் ஒன்று. புற்றுநோய் சிகிச்சையில் இருப்பவர்கள்அலர்ஜி உள்ளவர்கள் இதை சாப்பிட வேண்டாம்.

Soya Granules Health Benefits And Nutrititon Facts

.