ரவை புளியோதரை / RAVA PULIYODHARAI

Posted in தானிய வகை ரெசிபிகள்

 

தேவையான பொருட்கள்

அரிசி ரவை          –        1 கப்

நீர்                   –        2 கப்

புளி                  –        எலுமிச்சை அளவு

பச்சை மிளகாய்       –        3

வத்தல் மிளகாய்      –        3

கடுகு                –        1 தேக்கரண்டி

கடலை பருப்பு       –        1 மேஜைக்கரண்டி

உழுத்தம் பருப்பு      –        1 மேஜைக்கரண்டி

நிலக்கடலை         –        2 மேஜைக்கரண்டி

மஞ்சள் தூள்         –        1/2 தேக்கரண்டி

பெருங்காயம்         –        1/8 தேக்கரண்டி

கறி வேப்பிலை       –        2 கொத்து

எண்ணெய்           –        3 + 1 மேஜைக்கரண்டி

உப்பு                 –        தேவையான அளவு

செய்முறை

புளியை நீரில் கரைத்து வடிகட்டி தனியே வைக்கவும்.

ஒரு அடி கனமான பாத்திரத்தில் 2 கப் நீா் சேர்த்து கொதிக்க வைக்கவும். அதனுடன் 1 தேக்கரண்டி எண்ணெய் சேர்க்கவும். பின்பு தீயை குறைத்து விட்டு ரவையை அதனுடன் சேர்த்து மூடி வைத்து மிதமான தீயில் வேக வேக வைக்கவும். இடையிடையே கிளறிக் கொள்ளவும்.

பின்பு தீயை அணைத்து விட்டு சிறிது நேரம் அதில் வைக்கவும். பின்பு அதனை ஒரு பாத்திரத்தில் வைத்து ஆற வைக்கவும். 

பின்பு ஒரு பானில் எண்ணெய் விட்டு சூடாக்கவும். அதில் கடுகு, கடலைப் பருப்பு, உழுத்தம் பருப்பு, மற்றும் நிலக்கடலை சேர்க்கவும். பொன்னிறமாகும் வரை பொரிக்கவும். பின்பு பச்சை மிளகாய், வத்தல் மிளகாய், கறி வேப்பிலை, மற்றும் பெருங்காயம் சேர்த்து சிறிது நேரம் பொரிக்கவும்.

பின்பு புளித் தண்ணீர் சேர்க்கவும்.

சிறிது நேரம் நன்கு கிளறவும். பின்பு தீயை அணைத்து விடவும்.

பின்பு இதனை ரவையுடன் சேர்க்கவும். உப்பு சேர்த்து நனகு கிளறவும்.

ரவை புளியோதரை ரெடி!!!!!!!

RAVA HEALTH BENEFITS AND MINERALS

.