பாசிப்பயறு குழம்பு / Green Gram Curry

Posted in தானிய வகை ரெசிபிகள்

தேவையான பொருட்கள்

பாசிப்பயறு                   -      100 கிராம்

புளி                            -      ஒரு சிறிய  அளவு

உப்பு                           -      தேவைக்கேற்ப

தக்காளி                      -      ஒன்று சிறு துண்டுகளாக நறுக்கியது

வெங்காயம்                   -       ஒன்று சிறு துண்டுகளாக நறுக்கியது

பூண்டு                      -      2 பற்கள் நசுக்கியது

சாம்பார் பொடி             -      2 ஸ்பூன்

கடுகு                          -      ஒரு ஸ்பூன்

உளுத்தம் பருப்பு        -      ஒரு ஸ்பூன்

காய்ந்த மிளகாய்          -      ஒன்று

சீரகம்                          -      ஸ்பூன்

எண்ணெய்                   -      4 ஸ்பூன்

செய்முறை

பாசிப்பயற்றை வெறும் வாணலியை சூடாக்கி அதில் போட்டு வாசம் வரும்வரை வறுத்தெடுத்து பின் தண்ணீர் விட்டு வேக விடவும். பயறு பாசி வெந்ததும் தக்காளிவெங்காயம்சாம்பார் பொடி எல்லாம் ஒன்று சேர்த்து வெந்ததும் உப்புபுளியை கரைத்து அதில் ஊற்றி உப்பு நன்கு சார்ந்ததும்தோலுடன் நசுக்கிய பூண்டை அதில் போட்டு பின் எண்ணெயை சூடாக்கிஅதில் தாளிப்பவற்றைப் போட்டு தாளித்துகுழம்பில் ஊற்றி கொதித்ததும் இறக்கி விடவும்.  இது  சாதத்துடன்  சாப்பிட சுவையாக இருக்கும்!!!!

 Tomato Health Benefits And Minerals

.