பச்சை பயறு தோரன் / GREEN GRAM THORAN / MUNG BEAN THORAN

Posted in தானிய வகை ரெசிபிகள்

தேவையான பொருட்கள்

பச்சைப் பயறு                –        1 கப்

உப்பு                         –        தேவையான அளவு

நீா்                           –        3 கப்

அரைக்க

தேங்காய்                    –        1 கப்

வத்தல்மிளகாய்             –        6

பூண்டு                       –        3 பற்கள்

மஞ்சள் தூள்                –        1 தேக்கரண்டி

தாளிக்க

எண்ணெய்                  –        1 மேஜைக்கரண்டி

கடுகு                        –        1 தேக்கரண்டி

உழுத்தம் பருப்பு             –        1 தேக்கரண்டி

ஜீரகம்                       –        1 தேக்கரண்டி

கறி வேப்பிலை             –        1 கொத்து

செய்முறை

 

தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்

பச்சை பயறை பிரஷர் குக்கரில் எடுத்துக் கொள்ளவும்

நீர் சேர்க்கவும்

உப்பு சேர்க்கவும்

பயறு வேகும் வரை வேக வைக்கவும்

மிக்சியில் தேங்காயை எடுத்துக் கொள்ளவும்

வத்தல் மிளகாய், பூண்டு மற்றும் மஞ்சள் தூள் சேர்க்கவும்

கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்

கடாயில் எண்ணெய் விட்டு சூடாக்கவும்

தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளிக்கவும்

நன்கு கிளறவும்

பின்பு அரைத்த தேங்காய் மசாலா சேர்க்கவும்

நன்கு கிளறவும்

பின்பு அதனை வேக வைத்த பச்சை பயறுடன் சேர்க்கவும்

நன்கு கிளறவும்

பச்சை பயறு தோரன் ரெடி!!!!!!

.