மக்காச்சோள ஃப்ரை / BABY CORN FRY
தேவையான பொருட்கள்
சோளம் – 10
எண்ணெய் – பொரிக்க
மாவுக் கலவைக்கு
மைதா மாவு – 1 கப்
சோள மாவு - 1/4 கப்
சோயா சாஸ் – 1 மேஜைக்கரண்டி
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் – 1 தேக்கரண்டி
பேக்கிங் பவுடர் – 1 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது – 1 மேஜைக்கரண்டி
அஜினமோட்டோ – 1 தேக்கரண்டி
நீர் – தேவையான அளவு
செய்முறை
தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்
பின்பு சோளத்தின் தோலை நீக்கி அதனை சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்
பின்பு நீரை கொதிக்க வைக்கவும்
சோளத்தை அதில் போட்டு சில நிமிடங்கள் வைத்து பின்பு வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்
பின்பு சோள மாவு மற்றும் மைதா மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்
மீதமுள்ள பொருட்களை அதனுடன் சேர்க்கவும்
நீர் சேர்த்து நன்கு கலக்கவும்
பின்பு சோளத் துண்டுகளை அந்த மாவுக் கலவையில் போட்டு முக்கி எடுக்கவும்
பின்பு அதனை எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்
பொன்னிறமானதும் அதனை எடுத்து பேப்பர் டவ்வலில் வைக்கவும்
எணணெய் வெளியேறியதும் அதனை எடுத்து பரிமாறவும்