உளுத்தம்பருப்பு அல்வா / URAD DAL HALWA

Posted in இனிப்பு

தேவையான பொருட்கள்

உளுத்தம் பருப்பு       -          ஒரு கப்
நெய்                         -          அரை கப்
பால்கோவா             -          இரண்டு மேசைக்கரண்டி
சர்க்கரை                 -           ஒரு கப்
பாதாம்பருப்பு          -            20 கிராம்
சாரப்பருப்பு             -            20 கிராம்
கேசரிப்பவுடர்         -           ஒரு சிட்டிகை
குங்குமப்பூ              -           20
பன்னீர்                     -           2 தேக்கரண்டி

செய்முறை

  • உளுத்தம்பருப்பை முதல் நாள் இரவே ஊறவைத்து மறுநாள் எடுத்து நன்கு கழுவி மிக்ஸியில் அல்லது உரலில் போட்டு வெண்ணெய் போல் கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.
  • ஒரு அடிக்கனமான பாத்திரத்தில் நெய்யை ஊற்றி அடுப்பில் வைத்து
  • நெய் காய்ந்ததும் அரைத்து வைத்திருக்கும் உளுத்தம் மாவைப் போட்டு அடிப்பிடிக்காமல் கிளறவும்.
  • பிறகு மாவு நன்கு சிவந்து வந்ததும் பால்கோவா, சீனி ஆகியவற்றைப் போட்டு கிளறவும்.
  • தேவையெனில் நெய் சேர்த்து அல்வா பதத்திற்கு வரும்வரை கை விடாது கிளறவும்.
  • பாதாம்பருப்பை தோலுரித்து வறுத்து அல்வாவில் சேர்க்கவும். அதனுடன் சாரப்பருப்பையும் வறுத்துப் போடவும்.
  • குங்குமப்பூவை பன்னீரில் கரைத்து அல்வாவில் ஊற்றி கிளறி மூடி வைத்துவிடவும்.
  • சிறிது நேரத்திற்கு பிறகு ஒரு தாம்பாளத்தில் கொட்டிப் பரப்பி ஆறியபிறகு தேவையான வடிவில் துண்டுகளாக போட்டுக் கொள்ளவும்.
.