முளைக்கட்டிய கொள்ளு பொரியல், sprouts Horse Gram Fry

Posted in தானிய வகை ரெசிபிகள்

தேவையான பொருட்கள்:

கொள்ளு              -       2 கப்

தேங்காய்             -       1 (பொடியாக நறுக்கியது)

துருவிய தேங்காய்    -       2 டேபிள் ஸ்பூன்

வெங்காயம்           -       1 (நறுக்கியது)

மல்லித் தூள்         -       2 டேபிள் ஸ்பூன்

மிளகாய் தூள்        -       1 டீஸ்பூன்

புளி சாறு             -       2 டேபிள் ஸ்பூன்

கடுகு                 -       1/2 டீஸ்பூன்

உப்பு                  -       தேவையான அளவு

எண்ணெய்            -       1 டீஸ்பூன்

தண்ணீர்              -       1 கப்

செய்முறை:

 

*முதலில் கொள்ளுவை இரவில் படுக்கும் போது நீரில் நன்கு ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

*பின் காலையில் அதனை ஒரு ஈரமான காட்டன் துணியில் போட்டு சுற்றி, 1-2 நாட்கள் வைத்துக் கொள்ள வேண்டும். இதனால் முளைக்கட்டிய கொள்ளு கிடைக்கும்.

*பின்பு மிக்ஸியில் தேங்காய், மல்லி தூள், மிளகாய் தூள் மற்றும் புளி சாறு ஊற்றி, சற்று கெட்டியான பேஸ்ட் போல் செய்து கொள்ள வேண்டும்.

*பிறகு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு சேர்த்து தாளித்து, வெங்காயம் போட்டு பொன்னிறமாக வதக்கி கொள்ள வேண்டும். அடுத்து முளைக்கட்டிய கொள்ளுவைப் போட்டு, 3-4 நிமிடம் தீயை குறைவில் வைத்து வதக்க வேண்டும்.

*பின் அரைத்து வைத்துள்ள மசாலாவைப் போட்டு, உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி, 5-6 விசில் விட்டு இறக்கி, விசில் போனதும், குக்கரை திறக்க வேண்டும். இறுதியில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் துருவி வைத்துள்ள தேங்காய் சேர்த்து வதக்கி, குக்கரில் உள்ள கொள்ளுவை சேர்த்து, 5 நிமிடம் தண்ணீர் வற்றும் வரை நன்கு வதக்கி இறக்க வேண்டும்.

*இப்போது சூப்பரான கொள்ளு பொரியல் ரெடி

.