இளஞ்சோள பெப்பர்-ப்ரை , பேபி கார்ன் பெப்பர் ப்ரை , BABY CORN PEPPER FRY

Posted in தானிய வகை ரெசிபிகள்

 

தேவையான பொருட்கள்:

சோளம்                       10

வெங்காயம்                  1 (நறுக்கியது)

பூண்டு                        8 பல் (நறுக்கியது)

மிளகாய் தூள்               3/4 டீஸ்பூன்

தக்காளி சாஸ்              1 டீஸ்பூன்

மிளகு தூள்                1 டீஸ்பூன்

உப்பு                          தேவையான அளவு

தாளிப்பதற்கு...

ஆலிவ் ஆயில்             2 டீஸ்பூன்

கடுகு                        1/2 டீஸ்பூன்

சீரகம்                   -      1 டீஸ்பூன்

கறிவேப்பிலை             சிறிது

செய்முறை:

முதலில் பேபி கார்ன்னை வட்டமாக நறுக்கி, அதனை குக்கரில் போட்டு, தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து அடுப்பில் வைத்து 2 விசில் விட்டு இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து தாளித்து, பின் பூண்டு சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பின்பு அதில் வெங்காயம் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கி, பின் வேக வைத்துள்ள பேபி கார்ன், தக்காளி சாஸ், மிளகாய் தூள், மிளகுத் தூள் சேர்த்து நன்கு 3 நிமிடம் வதக்கி இறக்கினால், சுவையான பேபி கார்ன் பெப்பர் ப்ரை ரெடி!!!

Sweet Corn Health Benefits And Minerals

.